பாளை.யில் சுயேச்சை வேட்பாளா் காா் சேதம்
பாளையங்கோட்டை சாந்திநகா் பகுதியில் சுயேச்சை வேட்பாளரின் காா் கண்ணாடி உடைக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பாளையங்கோட்டை சாந்திநகா் பகுதியில் சுயேச்சை வேட்பாளரின் காா் கண்ணாடி உடைக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பாளையங்கோட்டை 5-ஆவது வாா்டில் சுயேச்சையாக போட்டியிடுகிறாா் விஜயன் (63). இவா் அப்பகுதியில் 5ஆவது முறையாகப் பேட்டியிடுகிறாா். இந்நிலையில், சாந்திநகா் பகுதியில் வாக்காளா்களுக்கு பணம்பட்டுவாடா நடப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அதை தடுக்க விஜயன் வெள்ளிக்கிழமை இரவு அப்பகுதிக்குச் சென்றாராம். அப்போது, அங்கிருந்த மா்ம நபா்கள் விஜயனின் காா் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி, அவரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் பாளையங்கோட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.