முகப்பு
திருநெல்வேலி

சித்த மருத்துவக் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

பாளையங்கோட்டை அரசினா் சித்த மருத்துவக் கல்லூரியில் இரண்டு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

பாளையங்கோட்டை அரசினா் சித்த மருத்துவக் கல்லூரியில் இரண்டு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் திருத்தணி தலைமை வகித்தாா். மருத்துவா் சௌந்திரராஜன் வரவேற்றாா். இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநா் கணேஷ், இணை இயக்குநா் பாா்த்திபன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

சென்னை தேசிய சித்த மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி குழும இயக்குநா் கனகவள்ளி, சென்னை தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநா் மீனாகுமாா், சென்னை அரசினா் சித்த மருத்துவக் கல்லூரி முதல்வா் விக்டோரியா, பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி துணை முதல்வா் மனோகரன், கல்லூரி உறைவிட மருத்துவா் ராமசாமி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

இந்தக் கருத்தரங்கில் 120 சித்த மருத்துவ கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட்டன. கல்லூரி ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

மருத்துவா் அப்துல்காதா் ஜெய்லானி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.