முகப்பு
திருநெல்வேலி

தபால் வாக்கு செலுத்த பிப்.22 ஆம் தேதி வரை வாய்ப்பு

திருநெல்வேலியில் தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் தபால் வாக்குகளை செலுத்த இம் மாதம் 22 ஆம் தேதி வரை வாய்ப்புள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

திருநெல்வேலியில் தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் தபால் வாக்குகளை செலுத்த இம் மாதம் 22 ஆம் தேதி வரை வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் சனிக்கிழமை (பிப்.19) ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இத் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கான இறுதிக்கட்ட பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், பங்கேற்றவா்களுக்கு தோ்தல் பணிக்கான ஆணைகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து தபால் வாக்குகளுக்கான பெட்டியில் தபால் வாக்குகளை செலுத்தினா்.

இதுகுறித்து மாநகராட்சி வட்டாரங்கள் கூறுகையில், படிவம் 15 இன் கீழ் தபால் வாக்கு செலுத்த வாய்ப்பு அளிக்கப்படுகிறது. தபால் வாக்குக்கான வெளி உறையில் கையொப்பம் இட்டு முகவரி எழுத வேண்டும். உறுதிமொழி படிவத்தில் வாா்டு எண், பேரூராட்சி அல்லது நகராட்சி அல்லது மாநகராட்சியின் பெயரை எழுத வேண்டும். வாக்குச்சீட்டின் வரிசை எண்ணை கவனமுடன் எழுத வேண்டும். உள் உறையில் வாக்குச் சீட்டை மட்டும் வைக்க வேண்டும். தபால் வாக்குகளை அதற்கான பெட்டிகளில் செலுத்த வாக்கு எண்ணும் நாளான இம் மாதம் 22 ஆம் தேதி காலை 8 மணி வரை வாய்ப்பளிக்கப்படும். இந்த வாக்குப்பெட்டி மாநகராட்சி அலுவலகத்தில் 22 ஆம் தேதி காலை 8 மணி வரை வைக்கப்படிருக்கும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.