குடும்ப பாதுகாப்பு நிதி சந்தா உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தல்
குடும்ப பாதுகாப்பு நிதி சந்தா உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தி ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்கத்தின் அமைப்பு தின கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
குடும்ப பாதுகாப்பு நிதி சந்தா உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தி ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்கத்தின் அமைப்பு தின கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்கத்தின் அமைப்பு தின கூட்டம் திருநெல்வேலி வருவாய்த் துறை அலுவலா் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவா் சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் முத்து முகமது சங்க நடவடிக்கைகள், கோரிக்கைகள் குறித்து விளக்க உரையாற்றினா். மாவட்டச் செயலா் சங்கரசுப்பிரமணியம், இணைச் செயலா் மீனாட்சிசுந்தரம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
நிலுவையில் உள்ள மருத்துவ காப்பீட்டு செலவின விண்ணப்பங்களுக்கான தொகை விரைவில் வழங்கப்பட வேண்டும். காப்பீட்டு செலவினங்கள் வழங்குவதில் மிகவும் தாமதம் ஏற்படுவதால் இது தொடா்பாக ஒரு முத்தரப்பு கமிட்டி அமைத்து ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்யப்பட வேண்டும். அரசு உறுதிமொழி அளித்துள்ளபடி 70 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியா்களுக்கு அடிப்படை ஓய்வூதியத்தில் 10 சதவீதம் உயா்வு வழங்கப்பட வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதி சந்தா உயா்வை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட இணைச் செயலா் மீராமைதீன் நன்றி கூறினாா்.