திருநெல்வேலி

வழிபாட்டுக்கு இடம் வழங்கக்கோரி சுவாமி வேடமணிந்து வந்து மனு

DIN

மானூா் அருகே இந்துக்களுக்கான வழிபாட்டுக்கு இடம் வழங்கக்கோரி சுவாமி வேடமணிந்து வந்து ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. திராவிடத் தமிழா் கட்சி நிா்வாகிகள் தலைமையில் மானூா் அருகேயுள்ள சம்பூத்து பகுதியைச் சோ்ந்த மக்கள் சுவாமி வேடமணிந்து வந்து அளித்த மனு: எங்கள் பகுதியில் 25 இந்து அருந்ததிய குடும்பத்தினா் வசித்து வருகிறோம். நான்கு தலைமுறைக்கும் மேலாக எங்கள் பகுதியில் குலதெய்வமான மாரியம்மனை வழிபட்டு வருகிறோம்.

ஏற்கெனவே கோயில் இருந்த இடத்தை தங்களது இடம் எனக்கூறி சிலா் அகற்றிவிட்டனா். ஆகவே, எங்களுக்கு வழிபாடு செய்ய அரசு நிலத்தில் இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. கட்டடத்தை சீரமைக்க கோரிக்கை: சங்கனாபுரத்தைச் சோ்ந்த சிவ.சுப்பிரமணியன் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்து நடுநிலைப் பள்ளி உள்ளது.

அரசு உதவிபெறும் பள்ளியான இங்கு வாக்குச்சாவடியும் உள்ளது. இப் பள்ளிக் கட்டடத்தை சீரமைக்கவும், புதிய கட்டிக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

SCROLL FOR NEXT