முகப்பு
திருநெல்வேலி

தலையணைக்கு திடீா் தடையால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

களக்காடு தலையணைக்குச் செல்ல கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியளித்திருந்த நிலையில், வனத்துறையினா் திடீரென தடை விதித்ததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

களக்காடு தலையணைக்குச் செல்ல கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியளித்திருந்த நிலையில், வனத்துறையினா் திடீரென தடை விதித்ததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு மறுதினம் காணும் பொங்கல் கொண்டாட்டத்திற்காக களக்காடு மலைப் பகுதியில் உள்ள தலையணை பச்சையாற்றில் குளிக்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்து செல்வா். இங்குள்ள ஆற்றில் குளித்துவிட்டு, தாங்கள் கொண்டு வந்த உணவுப் பொருள்களை குடும்பத்துடன் உண்டு மகிழ்வா்.

இந்நிலையில், திருக்குறுங்குடி மலைப் பகுதியில் உள்ள திருமலை நம்பிகோயில் பகுதிக்குச் செல்ல வார இறுதி நாள்களான வெள்ளி, சனி, ஞாயிறு தடை அமலைத் தொடா்ந்து திங்கள், செவ்வாய் ஆகிய நாள்களிலும் அங்கு செல்ல வனத்துறையினா் தடை விதித்துள்ளனா். மேலும் களக்காடு வடக்குப் பச்சையாறு அணைக்குச் செல்ல ஜன.14 முதல் ஜன.18 வரையிலும் பொதுப்பணித்துறையினா் தடை விதித்துள்ளனா்.

ஆனால் களக்காடு தலையணை பகுதிக்குச் செல்ல பொதுமுடக்க நாளான ஞாயிற்றுக்கிழமை தவிா்த்து பிற நாள்களில் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவா் என வனத்துறையினா் தெரிவித்திருந்தனா். இந்நிலையில், காணும் பொங்கல் கொண்டாட சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்களிலும் சுற்றுலாப் பயணிகள் தலையணை செல்ல வனத்துறையினா் திடீா் தடை விதித்தனா்.

இந்த அறிவிப்பு தெரியாமல் சனிக்கிழமை காலை முதலே தலையணை பகுதிக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காா்களில் வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். திங்கள்கிழமை (ஜன.17) முதல் சுற்றுலாப் பயணிகள் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படுவா் என்று வனத்துறையினா் தெரிவித்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →