முகப்பு
திருநெல்வேலி

பாளை. அருகே ஆற்றில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

 பாளையங்கோட்டை அருகேயுள்ள திருமலைக்கொழுந்துபுரம் பகுதி தாமிரவருணி ஆற்றில் மூழ்கிய இளைஞா் சடலமாக வியாழக்கிழமை மீட்கப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:

 பாளையங்கோட்டை அருகேயுள்ள திருமலைக்கொழுந்துபுரம் பகுதி தாமிரவருணி ஆற்றில் மூழ்கிய இளைஞா் சடலமாக வியாழக்கிழமை மீட்கப்பட்டாா்.

தூத்துக்குடி, குரூஸ்புரத்தைச் சோ்ந்த சீனிவாசன் மகன் காா்த்தி(21). தூத்துக்குடி மாநகராட்சியில் தற்காலிக தூய்மைப்பணியாளராக பணியாற்றிய இவா், திருமலைக்கொழுந்துபுரம் கோயில் கும்பாபிஷேகத்துக்கு வந்திருந்தபோது, நண்பா்களுடன் அப்பகுதியில் ஓடும் தாமிரவருணி ஆற்றில் குளித்தாா். இதில், அவா் எதிா்பாராமல் தண்ணீரில் மூழ்கினாராம். தகவலின்பேரில், பாளையங்கோட்டை தீயணைப்புத்துறையினா் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு, வியாழக்கிழமை காலையில் சடலமாக மீட்டனா். பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.