வண்ணாா்பேட்டையில் ஆா்ப்பாட்டம்
வண்ணாா்பேட்டையில் பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வண்ணாா்பேட்டையில் பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் மதமாற்ற முயற்சியால் உயிரிழந்த லாவண்யா குடும்பத்துக்கு நீதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஆ.மகாராஜன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச்செயலா் முத்துக்குமாா், கே.எஸ்.முருகப்பா, வி.ஹெச்.பி. பொறுப்பாளா் ஆறுமுகக்கனி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிா்வாகிகள் சாந்திராகவன், வைரமுத்து, செல்வகுமாா், சுயம்பு உள்பட பலா் கலந்துகொண்டனா். டி.எஸ்.ஆனந்தராஜ் நன்றி கூறினாா்.