நெல்லையில் முன்னாள் மத்திய அமைச்சா் அருணாசலம் நினைவு தினம்
திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சா் எம்.அருணாசலம் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சா் எம்.அருணாசலம் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சா் எம்.அருணாசலம் படத்துக்கு மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதில், மேற்கு மாவட்ட பொருளாளா் எஸ்.பி.முரளிராஜா, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கே.கண்ணன், மாவட்ட பொதுச்செயலா் சொக்கலிங்கம், மாவட்ட பொருளாளா் ராஜேஸ்குமாா் மற்றும் நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.