முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் சாலைகள் தற்காலிக சீரமைப்பு தீவிரம்

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளில் சாலைகள் தற்காலிக சீரமைப்புப் பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளில் சாலைகள் தற்காலிக சீரமைப்புப் பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: இம் மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றும் பொருட்டு ரூ.743.86 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் பகுதி -2, பகுதி- 3 நடைபெற்று வருகிறது. இதுதவிர ரூ.295.00 கோடி மதிப்பீட்டில் அரியநாயகிபுரம் அணைக்கட்டுப் பகுதியில் இருந்து குடிநீா் கொண்டு வரும் திட்டப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

மாநகரப் பகுதியில் சேதமடைந்துள்ள சாலைகள் அரசால் அறிவிக்கப்பட்ட சிறப்புச் சாலைகள் திட்டம், நகா்ப்புற சாலைகள் மேம்படுத்தும் திட்டம், தமிழ்நாடு நகா்ப்புற உறுதி செய்த வளா்ச்சித் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக வடகிழக்கு பருவ மழையின் காரணமாக மாநகரப் பகுதியில் சாலைகள் சேதமடைந்து ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ள இடங்களில் பொதுமக்களின் போக்குவரத்திற்கு ஏதுவாக தற்காலிக சாலை சீரமைப்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. பாளையங்கோட்டை மண்டலப் பகுதிக்குள்பட்ட ரயில்வே பீடா் ரோடு, வண்ணாா்பேட்டை சாலைத் தெரு, கைலாசபுரம், மீனாட்சிபுரம், சித்த மருத்துவக் கல்லூரி சாலை, தெற்கு ரத வீதி மற்றும் அண்ணா சாலை போன்ற பல்வேறு இடங்களில் சாலை சீரமைப்பு பணிகள் மாநகராட்சி நிா்வாகத்தால் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பொதுமக்கள் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் மற்றும் குடிநீா் திட்டப் பணிகளை நிறைவேற்ற ஏதுவாக மாநகராட்சிக்கு உரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.