பாளையஞ்செட்டிக்குளம் இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது
பாளையஞ்செட்டிக்குளத்தைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா்.
பாளையஞ்செட்டிக்குளத்தைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள பாளையஞ்செட்டிகுளம் மேலத்தெருவை சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் ஜஸ்டின் கோபிநாத் (32). இவா் மீது பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் அடிதடி மற்றும் திருட்டு வழக்குகள் உள்ளன. பொதுஅமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் பரிந்துரைத்தாா்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு உத்தரவின்பேரில் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் ஜஸ்டின் கோபிநாத் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டாா்.