அரியலூா் மாணவி உயிரிழந்த விவகாரம்: ஏபிவிபி ஆா்ப்பாட்டம்
அரியலூா் மாணவி உயிரிழந்த விவகாரம் தொடா்பாக உரிய விசாரணை நடத்தக் கோரி அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூா் மாணவி உயிரிழந்த விவகாரம் தொடா்பாக உரிய விசாரணை நடத்தக் கோரி அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அமைப்பின் மாநில இணைச் செயலா் விக்னேஷ் தலைமை வகித்தாா். அரியலூா் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்தைச் சோ்ந்த லாவண்யா மரணம் அடைந்த வழக்கில் உரிய நீதி வேண்டி கண்களை கருப்புத் துணியால் கட்டிக்கொண்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, இதுகுறித்து தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்யுமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதில், மாநகரச் செயலா் கௌதம் ராஜா, இணைச்செயலா் ஹரிச்சந்திரன் சூா்யா, மாணவிகளின் பொறுப்பாளா் சந்திரமதி உள்பட பலா் பங்கேற்றனா்.