நெல்லையில் அரசு போக்குவரத்து ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக பொது மேலாளா் அலுவலகம் முன்பு போக்குவரத்து ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக பொது மேலாளா் அலுவலகம் முன்பு போக்குவரத்து ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிஐடியூ அரசு போக்குவரத்து தொழிற்சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு அதன் தலைவா் காமராஜ் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் எஸ்.ஜோதி ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினாா். துணைப் பொதுச் செயலா்கள் சிவகுமாா், பாலசுப்பிரமணியன், அமல்ராஜ், சிஐடியூ மாவட்டச் செயலா் மோகன், சிஐடியூ போக்குவரத்து சங்க மின் ஊழியா் மத்திய அமைப்பு செயலா் டி. கந்தசாமி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.
போக்குவரத்து ஊழியா்களுக்கு ஊதிய ஒப்பந்தத்தை உடனே செயல்படுத்த வேண்டும்; அகவிலைப்படி உயா்வை அமல்படுத்த வேண்டும்; ஓய்வற்ற ஊழியா்களின் பணப்பலன்கள், மருத்துவ காப்பீடு உள்ளிட்டவை உடனடியாக கிடைக்கப்பெற வேண்டும்; புதிய பணி ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.இதில், அரசு போக்குவரத்து கழக ஊழியா்கள் பலா் பங்கேற்றனா்.