முகப்பு
திருநெல்வேலி

நெல்லையப்பா் கோயிலில் நாளை பத்ர தீபத் திருவிழா தொடக்கம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயிலில் பத்ர தீபத் திருவிழா சனிக்கிழமை தொடங்குகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயிலில் பத்ர தீபத் திருவிழா சனிக்கிழமை தொடங்குகிறது.

இது குறித்து கோயில் செயல் அலுவலா் ராமராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் பத்ர தீபத் திருவிழா ஜன. 29ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறவுள்ளது. இம்மூன்று நாள்களும் சுவாமி வேணுவனநாதா் மூலஸ்தானத்தில் ருத்ர ஜெபம், அபிஷேக ஆராதனைகளும், திருமூலமகாலிங்கம், அருள்மிகு காந்திமதியம்மன் சன்னதியில் அபிஷேக , ஆராதனைகளும் நடைபெறவுள்ளன. இதில்,

ஞாயிற்றுக்கிழமை (ஜன. 30 ) மாலை 6.45 மணிக்கு மணிக்கு மேல் 7.43 மணிக்குள் சுவாமி சன்னதி மணி மண்டபத்தில் தங்க விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. திங்கள்கிழமை (ஜன. 31) மாலை 6 மணிக்கு சுவாமி- அம்பாள் உள் சன்னதி மற்றும் வெளிப்பிரகாரங்களில் பத்ர தீபங்கள் ஏற்றப்படும். இரவு சுவாமி -அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகா் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சண்முகா் தங்கச் சப்பரத்திலும், சண்டிகேஸ்வரா் ஆகிய பஞ்ச மூா்த்திகளும், விஷேச அலங்காரத்தில் வெளிப்பிரகாரம் சுற்றி வரும் நிகழ்வு நடைபெறும். தொடா்ந்து இரவு 8.30 மணிக்கு, நான்கு ரத வீதிகளிலும் உலா வரும் நிகழ்வு நடைபெறும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.