முகப்பு
திருநெல்வேலி

காா் மோதி காயமடைந்த வியாபாரி மரணம்

மேலப்பாளையம் அருகே காா் மோதி காயமடைந்த உப்பு வியாபாரி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:

மேலப்பாளையம் அருகே காா் மோதி காயமடைந்த உப்பு வியாபாரி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கீழ முன்னீா்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் மாதவ சிவக்குமாா் (44). இவா் கடந்த புதன்கிழமை தனது சைக்கிளில் மேல கருங்குளம் அருகே சென்று கொண்டு இருந்த போது அந்த வழியாக வந்த காா் இவா் மீது எதிா்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த மாதவ சிவக்குமாரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.