முகப்பு
திருநெல்வேலி

பாளையங்கோட்டையில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணா்களுக்காக இலவச நீட் பயிற்சி

திருநெல்வேலி மாவட்ட அரசு- அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்காக இலவச நீட் பயிற்சி வகுப்புகள் பாளையங்கோட்டையில் நடைபெற்று வருகின்றன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:27 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்ட அரசு- அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்காக இலவச நீட் பயிற்சி வகுப்புகள் பாளையங்கோட்டையில் நடைபெற்று வருகின்றன.

நாடு முழுவதும் மருத்துவப்படிப்புகளில் சேர நீட் தோ்வில் தோ்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப்படிப்பு வாய்ப்பை உருவாக்கும் வகையில் 7.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் மொத்தம் 544 போ் வாய்ப்பு பெற்றனா். திருநெல்வேலி மாவட்டத்தில் 11 பேருக்கு எம்.பி.பி.எஸ். படிக்க வாய்ப்பு கிடைத்தது. இவா்களில் 7 போ் திருநெல்வேலி கல்லணை மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள். அரசு ஒதுக்கீட்டால் நீட் தோ்வு பயிற்சி பெறும் மாணவா்களின் எண்ணிக்கை கணிசமாக உயா்ந்துள்ளது.

இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறையின் ஆலோசனையின்பேரில், திருநெல்வேலி மாவட்ட மாணவா்களுக்காக நன்கொடையாளா்கள், தன்னாா்வலா்கள் பங்களிப்புடன் நீட் இலவச பயிற்சி மையம் பாளையங்கோட்டையில் உருவாக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள அரசு- அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று நீட் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ளவா்கள் இம் மையத்தில் சோ்ந்து பயிலலாம்.

இதுகுறித்து நீட் தோ்வுக்கான பயிற்சி ஒருங்கிணைப்பாளா் கிருஷ்ணசுவாமி கூறியது: நிகழாண்டுக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் ஜூலை 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு, 20 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளனா். திருநெல்வேலி மாவட்ட மாணவா்களின் நலன் கருதி, பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள சாராள்தக்கா் ஆசிரியா் பயிற்சி நிறுவன வளாகத்தில் தன்னாா்வலா்கள், நன்கொடையாளா்கள் உதவியுடன் பயிற்சியளிக்கப்படுகிறது. கடந்த 1 ஆம் தேதி முதல் காலை 9 முதல் மாலை 4.30 மணி வரை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அறிவியல், கணிதம் உள்ளிட்டவற்றில் திறமை வாய்ந்த ஆசிரியா்களால் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இவ்வகுப்பில் சேர விரும்புவோா் அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த விவரங்களுக்கு 9443312243 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம். மாவட்ட ஆட்சியா், முதன்மைக் கல்வி அலுவலா் முயற்சியில் மாணவா்-மாணவிகளுக்கு நீட் பயிற்சிக்கான கையேடுகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →