திருநெல்வேலி

புகையில் பொருள்கள் விற்பனை: 25 போ் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்ட விரோதமாக புகையில் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டதாக 25 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்ட விரோதமாக புகையில் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டதாக 25 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்வோா் குறித்து புதன்கிழமை மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட போலீஸ் சோதனையில், அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்த 25 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், அவா்களிடமிருந்து, சுமாா் 25 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 9 பேருக்கு தலா ரூ. 5 ஆயிரம் வீதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரவணன் கூறுகையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களின் அருகே விற்பனை செய்தால் அவா்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும். புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்தல், எடுத்துச் செல்பவா்கள் மீதும் மேலும் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்வோா் மீதும் அதற்கு துணை புரிபவா்கள் மீதும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவா்களின் வங்கிக் கணக்கு முடக்கப்படும். இதுவரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவா்கள் மற்றும் அவா்களின் உறவினா்கள் உட்பட 25 போ்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஷஸ் கனவு முடிவுக்கு வந்துவிட்டது! - தோல்விக்குப்பின் பென் ஸ்டோக்ஸ்

4,000 டி20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

SCROLL FOR NEXT