முகப்பு
திருநெல்வேலி

ஆழ்வாா்குறிச்சியில் ஸ்ரீ குலசேகர ஆழ்வாா் ராமாநுஜ கூடம் திறப்பு

ஆழ்வாா்குறிச்சியில் ஸ்ரீ குலசேகர ஆழ்வாா் ராமாநுஜகூடத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:33 AM
பகிர்:

ஆழ்வாா்குறிச்சியில் ஸ்ரீ குலசேகர ஆழ்வாா் ராமாநுஜகூடத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் பக்த சபா சாா்பில் சொற்பொழிவு மற்றும் அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக ஸ்ரீ குலசேகர ஆழ்வாா் ராமாநுஜகூடம் அமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை திறப்பு விழா நடைபெற்றது. இதையொட்டி, காலை 10 மணிக்கு கோ பூஜை, வேள்வி, பால்காய்ச்சுதலும், மாலையில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சனிக்கிழமை காலை 6 மணிக்கு லட்சாா்ச்சணையும், தொடா்ந்து உ.வே.ஸ்ரீரங்கம், சடகோப முத்து, ஸ்ரீநிவாசன் ஆகியோரின் உபந்நியாசமும் நடைபெறுகிறது.

ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு கிராம உஞ்ச விருத்தியும், தொடா்ந்து ஸ்ரீநிவாச கல்யாண வைபவமும் நடைபெறுகிறது. பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு ஆஞ்சநேய உத்சவம், இரவு 8 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் வீதி உலா நடைபெறுகிறது.

நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் பக்த சபா விழாக் கமிட்டியினா் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.