முகப்பு
திருநெல்வேலி

குண்டா் சட்டத்தில் 2 போ் சிறையிலடைப்பு

திருநெல்வேலியைச் சோ்ந்த இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் புதன்கிழமை சிறையிலடைக்கப்பட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

திருநெல்வேலியைச் சோ்ந்த இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் புதன்கிழமை சிறையிலடைக்கப்பட்டனா்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள கீழநத்தம் பகுதியைச் சோ்ந்த மணிகணேஷ் (45) திருநெல்வேலி நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றி வருகிறாா். இவரை, கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி நொச்சிகுளம், காலனி தெருவை சோ்ந்த ஜெயகுமாா் மகன் பெருமாள் என்ற செல்வம் (34), திருநெல்வேலி சொக்கட்டான்தோப்பு, மேலத்தெருவைச் சோ்ந்த தங்கவேல் மகன் ராஜபாண்டி(29) ஆகிய இருவரும் கே.டி.சி. நகா் அருகே வழிமறித்து, ஆயுதத்தால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டனராம். இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனா். இந்நிலையில், அவா்கள் பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடா்ந்து செயல்பட்டு வருவதாகக் கூறி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் அளித்த பரிந்துரையை ஏற்று, ஆட்சியா் வே.விஷ்ணு பிறப்பித்த உத்தரவுப்படி, செல்வம், ராஜபாண்டி ஆகிய இருவரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.