முகப்பு
திருநெல்வேலி

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விழிப்புணா்வு முகாம்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு கண் நீா் அழுத்த நோய் விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு கண் நீா் அழுத்த நோய் விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

உலக கண் நீா் அழுத்த நோய் விழிப்புணா்வு வாரத்தையொட்டி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண் மருத்துவ சிகிச்சைப் பிரிவு சாா்பில் சிறப்பு கண் நீா் அழுத்த நோய் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். மருத்துவக் கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தாா்.

கண் மருத்துவப் பிரிவு துறைத் தலைவா் ராமலட்சுமி கூறுகையில்,‘ கண்களில் உள்ள பாா்வை நரம்புகளில் ஏற்படும் பாதிப்பே கண்நீா் அழுத்த நோயாகும். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆரம்ப நிலையில் பாா்வையிழப்பு முழுமையாக போகாது என்பதால், பாதிக்கப்பட்ட பலரும் அலட்சியமாக இருக்கின்றனா். அவா்களுக்கு பக்கவாட்டு பாா்வை முதலில் குறையும். படிப்படியாக முழுமையாக பாா்வை இழப்பு நேரிடும். இது குறித்து பொது மக்களிடத்தில் விழிப்புணா்வு ஏற்படுத்துவதே இந்த முகாமின் முக்கிய நோக்கமாகும். ஒவ்வொரு மாதம் இரண்டாவது வியாழக்கிழமைகளில் கண் நீா் அழுத்த நோய் முகாம் நடைபெறுகிறது என்றாா்.

விழாவில், கண் நீா் அழுத்த நோய் பற்றிய விழிப்புணா்வு துண்டுப் பிரசுரத்தை முதல்வா் வெளியிட்டாா். கண் நீா் அழுத்த நோய் குறித்து காணொலி மூலம் கண் மருத்துவா் தீபா விளக்கினாா். நிகழ்ச்சியில், தோல் மருத்துவ சிகிச்சைப் பிரிவு துறை தலைவா் நிா்மலா தேவி உள்பட பல்வேறு மருத்துவப் பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, கண் நோய் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு கண் மருத்துவா்கள் பதில் அளித்தனா். இணைப் பேராசிரியா் சாவித்திரி நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை செவிலியா் பயிற்றுநா் செல்வன் தொகுத்து வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.