ஹாரி பாட்டர் இணையத் தொடரின் டிரைலர்!
ஹாரி பாட்டர் இணையத் தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது குறித்து...
உலகப் புகழ் பெற்ற ஹாரி பாட்டர் கதைகளின் அடிப்படையில் உருவாகியுள்ள இணையத் தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது.
எழுத்தாளர் ஜே.கே. ரௌலிங் எழுதிய ஹாரி பாட்டர் கதைகள் நாவல்களாகவும், திரைப்படங்களாகவும் உலகளவில் மாபெரும் வெற்றியைப் பெற்றன.
உலகின் பல்வேறு மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்ட ஹாரி பாட்டர் நாவல்கள் மற்றும் திரைப்படங்களுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, ஹாரி பாட்டர் நாவல்களில் இருந்து ஆழமான கதைத் தழுவலுடன் புதிய நடிகர்கள் நடிக்கும் இந்த இணையத் தொடரை எச்.பி.ஓ. நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த நிலையில், இயக்குநர் மார்க் மைலாட் இயக்கியுள்ள “ஹாரி பாட்டர் அண்டு தி ஃபிலாசஃபர்ஸ் ஸ்டோன்” இணையத் தொடரின் டிரைலர் வியாழக்கிழமை (மார்ச் 26) வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், ஹாரி பாட்டர் நாவல்களின் அனைத்து பாகங்களும் ஒவ்வொரு சீசன்களாக உருவாகவுள்ள நிலையில், முதல் சீசன் வரும் 2026 கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The trailer for the Harry Potter web series has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.