நிகிலா விமலின் ஐஸ் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி!
ஐஸ் இணையத் தொடரின் வெளியீடு தொடர்பாக...
நடிகை நிகிலா விமல் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள ஐஸ் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐஸ் இணையத் தொடரின் பிரதான பாத்திரத்தில் காவல் துறை அதிகாரியாக கனி குஸ்ருதி நடித்துள்ளார். மனு அசோகன் இயக்கியுள்ள இந்தத் தொடருக்கு பாபி சஞ்சய் எழுத, அஞ்சனா நாயர் கதையை உருவாக்கியுள்ளார்.
காதல், அதீத ஈடுபாடு மற்றும் கட்டுப்பாடு எல்லை மீறும் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளை கனி குஸ்ருதி விசாரிக்கத் தொடங்குகின்றார். விசாரணை நகர நகர, காதலுக்கும் ஆபத்துக்கும் இடையிலான எல்லைகள் மங்குகின்றன. பயம், பாதுகாப்பின்மை மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் கனி குஸ்ருதியின் முன் வருகின்றன. ஆனால், உண்மையை நெருங்க நெருங்க, கனி குஸ்ருதி கண்டுபிடிக்கும் விஷயங்கள் அவர் எதிர்பார்த்ததைவிட மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருக்கின்றது. இப்படியாக கதை நகர்கிறது.
Advertisement
Advertisement
உயரே மற்றும் காணெக்கானே படங்களுக்குப் பிறகு, மனு அசோகன் – பாபி சஞ்சய் கூட்டணி மீண்டும் இந்த இணையத் தொடரில் இணைந்துள்ளனர்.
மேலும், இந்தத் தொடரில் நிகிலா விமல், தேவ் மோகன், சானியா ஐயப்பன் மற்றும் ஸ்ருதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர்.
இந்த நிலையில், ஐஸ் இணையத் தொடர் வரும் அக். 9 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடியில் வெளியாகிறது.
The release date for the web series eyes starring actress Nikhila Vimal in a lead role, has been announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.