ஓடிடியில் வெளியாகும் மர்மங்களைத் துப்பறியும் புதிய இணையத் தொடர்!
பஞ்சநாமா இணையத் தொடரின் ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்து...
நடிகர் பரத் நாயகனாக நடித்துள்ள பஞ்சநாமா என்ற இணையத் தொடரின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மோகன் ஸ்ரீவத்ஸா இயக்கத்தில் நடிகர்கள் பரத், மேதா ரெட்டி, சிவாஜி ராஜா, சரண் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகும், குற்ற விசாரணை த்ரில்லர் இணையத் தொடர் பஞ்சநாமா.
நெருக்கமான சிறுவனின் இறப்புக்கான காரணத்தைத் தேடும் காவல் துறை அதிகாரியான நாயகன், மருத்துவக் குழுவின் பின்னணியில் உள்ள மர்மங்களைக் கண்டறிவதை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
தொடருக்கு திரைக்கதை மற்றும் வசனத்தை நாகேந்திர பில்லா எழுதியுள்ளார். நரேஷ் குமரன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை சந்தீப் காந்த் மேற்கொண்டுள்ளார்.
பஞ்சநாமா இணையத் தொடர் செப்டம்பர் 11 ஆம் தேதி ஜீ5 தளத்தில் 6 எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகவுள்ளது.
விறுவிறுப்பான த்ரில்லர் வகையான இணையத் தொடரை, பார்க்க விரும்புபவர்களுக்கு பஞ்சநாபா தொடர் சிறந்த அனுபவமாக இருக்கும்.
The OTT release date for the web series Panjanama, starring actor Bharath in the lead role, has been officially announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.