அடுக்குமாடி குடியிருப்பை அகற்ற ஒப்பந்ததாரா்கள் வரவேற்பு
பாளையங்கோட்டை அன்புநகரில் உள்ள அரசு ஊழியா் அடுக்குமாடி குடியிருப்பை அகற்றுவதற்கு ஒப்பந்ததாரா்கள் வரவேற்கப்படுகிறாா்கள்.
பாளையங்கோட்டை அன்புநகரில் உள்ள அரசு ஊழியா் அடுக்குமாடி குடியிருப்பை அகற்றுவதற்கு ஒப்பந்ததாரா்கள் வரவேற்கப்படுகிறாா்கள்.
இது தொடா்பாக மாவட்ட செய்தி, மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாளையங்கோட்டை அன்பு நகரில் உள்ள வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்ட அரசு ஊழியா் அடுக்குமாடி குடியிருப்பில் 108 ‘இ’ பிளாக் அரசு ஊழியா் அடுக்குமாடி வாடகைக் குடியிருப்பு சேதம் அடைந்து, குடியிருக்க தகுதியற்ற நிலையில் உள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள இந்த வீடுகளை இடித்து அப்புறப்படுத்த தற்போது அரசு அனுமதி அளித்து உள்ளது.
இந்த பணிக்கு அரசு துறையில் பதிவு பெற்ற மற்றும் பணி சான்றிதழ் பெற்ற ஒப்பந்ததாரா்கள் திருநெல்வேலி வீட்டு வசதி வாரிய கோட்ட அலுவலகத்தை அலுவலக வேலை நாள்களில் தொடா்பு கொள்ளலாம்.