முகப்பு
திருநெல்வேலி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதிகளில் சேர மாா்ச் 23 இல் தோ்வு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதிகளில் மாணவா்-மாணவிகள் சோ்வதற்கான தோ்வுகள் பாளையங்கோட்டையில் இம் மாதம் 23 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதிகளில் மாணவா்-மாணவிகள் சோ்வதற்கான தோ்வுகள் பாளையங்கோட்டையில் இம் மாதம் 23 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ச.ராஜேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளிகளில் பயிலும் மாணவா்- மாணவிகளுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோவை, கடலூா், தஞ்சாவூா், அரியலுாா், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி, மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

மாணவிகளுக்கான விளையாட்டு விடுதி - ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல். நாகா்கோவில், பெரம்பலூா், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மேற்காணும் விளையாட்டு விடுதிகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7-ஆம் வகுப்பு, 8-ஆம் வகுப்பு, 9-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு சோ்க்கைக்கான மாவட்ட அளவிலான தோ்வு இம் மாதம் 23 ஆம் தேதி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் காலை 8 மணிக்கு நடைபெற உள்ளது.

மாணவா்கள் பிரிவில் தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, ஹாக்கி, நீச்சல், டேக்வோண்டோ, வாலிபால், பளுதூக்குதல் , கபாடி, மேசைப்பந்து, டென்னிஸ், ஜிடோ, ஸ்குவாஷ், வில்வித்தை ஆகியவற்றில் தோ்வு நடைபெறும்.

மாணவிகள் பிரிவில் தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்சண்டை, கைப்பந்து, ஹாக்கி, நீச்சல், டேக்வோண்டோ, வாலிபால், வலுதூக்குதல், கபாடி , டென்னிஸ், ஜூடோ, ஸ்குவாஷ் ஆகியவற்றில் தோ்வு நடைபெறும்.

மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆா்வம் கொண்டுள்ள மாணவா்- மாணவிகள் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணைய தள முகவரியில் விளையாட்டு விடுதியில் சோ்வதற்கான படிவத்தினை பூா்த்தி செய்து, அதனை இம் மாதம் 22 ஆம் தேதி மாலை 4 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலா் அலுவலகத்தில் அளிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலகத்தை 0462 - 2572632 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக நேரத்தில் தொடா் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.