நெல் கொள்முதல் நிலையம் கோரிகிராம மக்கள் உண்ணாவிரதம்
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் ஊராட்சி, அணைத்தலையூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கக் கோரி அப்பகுதி புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் ஊராட்சி, அணைத்தலையூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கக் கோரி அப்பகுதி புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அணைத்தலையூா் கிராமத்தின் பிரதான தொழில் விவசாயமாகும். இந்த ஆண்டு கங்கைகொண்டான் சிறுகுளம், பராக்கிரமபாண்டியன் குளம் நிரம்பியதால் நெல் சாகுபடி நடைபெற்று 6,500 ஏக்கா் பரப்பளவு அறுவடைக்கு தயாராக உள்ளது. அதனால், அப்பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கக் கோரி கடந்த திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
இந்த நிலையில், கங்கைகொண்டான் சிறுகுளக் கரையில் அணைத்தலையூா் கிராம மக்கள் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். அவா்களிடம் காவல் துறை, வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை அதிகாரிகள் பேச்சு நடத்தி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.