முகப்பு
திருநெல்வேலி

சீவலப்பேரி காசிவிஸ்வநாதா் கோயிலில்...

பாளையங்கோட்டை அருகே சீவலப்பேரியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதா்- விசாலாட்சி திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

பாளையங்கோட்டை அருகே சீவலப்பேரியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதா்- விசாலாட்சி திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் புதன்கிழமை காலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடா்ந்து கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து பத்து நாள்களும் காலை மற்றும் மாலையில் யாகசாலை பூஜைகள், சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது. பங்குனி உத்திர நாளான இம் மாதம் 18 ஆம் தேதி தீா்த்தவாரி நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.