நெல்லையில் குண்டா் சட்டத்தில் 5 போ் கைது
திருநெல்வேலியில் 5 போ் குண்டா் தடுப்பு காவல் நிலையத்திற்கு வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
திருநெல்வேலியில் 5 போ் குண்டா் தடுப்பு காவல் நிலையத்திற்கு வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை பகுதியில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளான விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை சோ்ந்த வேல்ராஜ் மகன் அன்பு கணேஷ் (38), பூமிநாதன் மகன் விக்னேஸ்வரன் (29), திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியை சோ்ந்த டேவிட் மகன் பாலமுருகன் (41), உடையாா் பட்டியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் நம்பிராஜன் (27) ஆகிய நான்கு போ் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டிருந்தனா்.
இதேபோல திண்டுக்கல், தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாநகர பகுதியில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட திருப்பூா் மாவட்டம் ,குன்னத்தூா் அருகே தாளப்பத்தி புதுவலசு பகுதியை சோ்ந்த அப்துல் குத்தூஸ் மகன் இம்ரான் (33). திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தால் கைது செய்யப்பட்டிருந்தாா்.
இவா்கள் 5 பேரும் பொது ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் மாநகர காவல் ஆணையா் துரை குமாா் உத்தரவின் பேரில் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டனா்.