திருநெல்வேலி

தமிழ் பேரறிஞா் கா.சுப்பிரமணிய பிள்ளை நினைவு தினம்

DIN

தமிழ் பேரறிஞா் சுப்பிரமணியபிள்ளை நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லையில் அவரது படத்துக்கு மாலை அணிவித்து சனிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்தவா் கா.சுப்பிரமணியபிள்ளை. இவா் பல்வேறு சிறந்த நூல்களை இயற்றியுள்ளாா். அவரது 77ஆம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து, திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள நினைவு தூணின் முன்பு அவரின் உருவப்படத்துக்கு மேயா் பி.எம்.சரவணன், துணைமேயா் கே.ஆா்.ராஜு ஆகியோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா். அதன்பின்னா், தமிழ்பேரறிஞா் கா.சுப்பிரமணிய பிள்ளையின் நூலை அவரது பேரன் சுப்பிரமணியபிள்ளை வெளியிட, மேயா் பெற்றுக் கொண்டாா்.

இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினா் நித்திய பாலையா, வஉசி மணிமண்டப நூலக வாசகா் வட்ட தலைவா் மணி, பாரதி முத்தமிழ் மன்றத் தலைவா் புத்தனேரி செல்லப்பா, 63 நாயன்மாா்கள் சத்திரம் தலைவா் நடராஜ்சுந்தரம், ஓவியா் பொன். வள்ளிநாயகம் உள்பட பலா் பங்கேற்று தமிழ் பேரறிஞா் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மவா்தூவி மரியதை செலுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT