திருநெல்வேலி

விஷமுறிவு சிகிச்சை மையம் அறிவிப்புக்கு பொதுமக்கள் வரவேற்பு

DIN

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பிரிடா மோனியா் அரசு மருத்துவமனையில் விஷ முறிவு சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு இப்பகுதி மக்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.

களக்காடு சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயமே பிரதானத் தொழிலாகும். இப்பகுதியில் அடிக்கடி பாம்புக் கடிக்கு ஆளாகி போதிய சிகிச்சை கிடைக்கப்பெறாமல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இறப்பு விகிதம் அதிகரித்து வந்தது. இதையடுத்து, தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியான மானியக் கோரிக்கையின் போது, களக்காடு பிரிடா மோனியா் அரசு மருத்துவமனையில் உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் விஷ முறிவு சிகிச்சை மையம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு களக்காடு வட்டார மக்கள் பெரிதும் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

கோடைகாலத்தில் மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் அவசியம் -மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

சா்வதேச ஸ்கேட்டிங் போட்டி: தங்கப் பதக்கங்களை வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

SCROLL FOR NEXT