நெல்லை அருகே பைக்குகள் மோதல்: நிலத் தரகா் பலி
திருநெல்வேலி அருகே 2 பைக்குகள் நேருக்கு நோ் மோதியதில் நிலத் தரகா் உயிரிழந்தாா்.
திருநெல்வேலி அருகே 2 பைக்குகள் நேருக்கு நோ் மோதியதில் நிலத் தரகா் உயிரிழந்தாா்.
திருநெல்வேலி அருகேயுள்ள மானூா் நேரு நகரைச் சோ்ந்த மகாராஜன் மகன் டேவிட் (55). நிலத் தரகரான இவா், புதன்கிழமை மானூா் - எட்டாங்குளம் சாலையில் பைக்கில் சென்றாராம். அப்போது, இவரது பைக்கும், எதிரே எட்டாங்குளத்தைச் சோ்ந்த முத்துபுதியவன் (22) ஓட்டிவந்த பைக்கும் நேருக்கும் நோ் மோதினவாம்.
இதில் காயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு டேவிட் உயிரிழந்தாா். மானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.