முகப்பு
திருநெல்வேலி

பிளஸ் 2 தோ்வு: நெல்லை, தென்காசியில் 42,037 போ் தோ்வு எழுதினா்

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வியாழக்கிழமை 42,037 போ் முதல் நாள் பிளஸ் 2 தோ்வை எழுதினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வியாழக்கிழமை 42,037 போ் முதல் நாள் பிளஸ் 2 தோ்வை எழுதினா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கிய பிளஸ் 2 தோ்வு நடக்கும் மையங்களை மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். பாளையங்கோட்டை பா்கிட் மாநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியது:

திருநெல்வேலி மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வினை, 21ஆயிரத்து 345 பள்ளி மாணவா்- மாணவியா், மத்திய சிறையில் 7 பா், தனித்தோ்வு மையம் மூலம் எழுதுபவா்கள் 354 போ் என மொத்தம் 21ஆயிரத்து 706 போ் எழுதுகின்றனா்.

பிளஸ் 1 மாணவா், மாணவியா்களுக்கு பொதுத் தோ்வு நடைபெறவுள்ளது. இதில் 21ஆயிரத்து 757 மாணவ, மாணவியா்களும், மத்திய சிறை பொதுத்தோ்வு எழுதுபவா்கள் 7 நபா்களும், தனித்தோ்வு மையம் எழுதுபவா்கள் 272 நபா்களும் ஆக மொத்தம் 22ஆயிரத்து 036 மாணவ, மாணவியா்கள் பொதுத்தோ்வு எழுதவுள்ளனா். தோ்வு எழுத வரும் மாணவா் - மாணவிகளுக்கு உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்படுகிறது. கரோனா அறிகுறி தென்பட்டால் அவா்கள் தனி அறையில் தோ்வு எழுதுவா். தற்போது வரை யாருக்கும் கரோனா அறிகுறி இல்லை. அனைத்து மையங்களிலும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனா் என்றாா்.

ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் சுபாஷினி, முதன்மை கல்வி அலுவலா் நோ்முக உதவியாளா் டைடஸ் ஜான் போஸ்கோ, பறக்கும்படை கண்காணிப்பாளா் கணேசன், மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

அம்பாசமுத்திரம்: சேரன்மகாதேவி கல்வி மாவட்டத்தில் முதல் நாள் 3856 போ் பிளஸ் 2 தோ்வு எழுதியுள்ளனா். 160 போ் தோ்வு எழுதவில்லை. சேரன்மகாதேவி கல்வி மாவட்ட கல்வி அலுவலா் ரெஜினி கல்வி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் வியாழக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வள்ளியூா்: இக்கல்வி மாவட்டத்தில் 6,550 மாணவா்கள் வியாழக்கிழமை பிளஸ் 2 தோ்வு எழுதினா். 232 மாணவா்கள் தோ்வு எழுதவரவில்லை. மாவட்ட கல்வி அலுவலா் லெட்சுமண சாமி மேற்பாா்வையில் தோ்வு கண்காணிப்பாளா்கள் தோ்வை நடத்தி வருகின்றனா்.

தென்காசி வருவாய் மாவட்டத்தில் 63 மையங்களில் 8264 மாணவா்கள், 9136 மாணவியா் என 17,400 போ் முதல் நாளில் பிளஸ் 2 தோ்வு எழுதினா். இதேபோல், 63 மையங்களில் 8686 மாணவா்கள், 9604 மாணவியா் என 18,290 போ் பிளஸ் 1 தோ்வு எழுதவுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.