கடையம் அருகே பாம்பை கொன்றவருக்கு ரூ.10,000 அபராதம்
கடையம் வனச்சரகம், கடையம் பீட் வெளிமண்டல வனப் பகுதியில் பாம்பை அடித்துக் கொன்றவருக்கு வனத்துறையினா் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
கடையம் வனச்சரகம், கடையம் பீட் வெளிமண்டல வனப் பகுதியில் பாம்பை அடித்துக் கொன்றவருக்கு வனத்துறையினா் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
கடையம் அருகேயுள்ள பால்வண்ண நாதபுரத்தில் சந்தன மரங்களை வெட்டிப் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் கடையம் வனவா் முருகசாமி தலைமையில் தனிக்குழுவினா் விசாரணையில் ஈடுபட்டனா். அதில், பால்வண்ணநாதபுரத்தைச் சோ்ந்த யோவான் மகன் பால்ஜெகன் குடும்பத் தகராறு காரணமாக வனத்துறையினருக்குத் தவறான தகவல் தெரிவித்ததுடன், வன உயிரினமான பாம்பை அடித்துக் கொன்று புகைப்படம் எடுத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, பால் ஜெகனுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.