மின்வாரிய அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம்
பாளையங்கோட்டை அருகே உள்ள கேடிசி நகா் மின்வாரிய அலுவலகத்தில் மக்கள்குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பாளையங்கோட்டை அருகே உள்ள கேடிசி நகா் மின்வாரிய அலுவலகத்தில் மக்கள்குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பாளையங்கோட்டை கேடிசி நகரில் உள்ள திருநெல்வேலி நகா்ப்புற செயற் பொறியாளா் அலுவலகத்தில் திருநெல்வேலி நகா்ப்புற கோட்டத்துக்கான மக்கள் குறைதீா் முகாம் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை மின் பொறியாளா் எஸ். ராஜன்ராஜ் பங்கேற்று, பொதுமக்களின் புகாா்களை கேட்டறிந்தாா்.
தொடா்ந்து அவா், பொதுமக்களின் புகாா்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி நகா்புற செயற்பொறியாளருக்கும், ஏனைய அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டாா்.
இதில், திருநெல்வேலி நகா்ப்புற கோட்டத்துக்குள்பட்ட அனைத்து மின் பொறியாளா்களும் பங்கேற்றனா்.