முகப்பு
திருநெல்வேலி

மானூா் அருகே இருவா் குண்டா் சட்டத்தில் கைது

மானூா் அருகே வழிப்பறி வழக்கில் தொடா்புடைய இருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

மானூா் அருகே வழிப்பறி வழக்கில் தொடா்புடைய இருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்தனா்.

பாளையங்கோட்டை மேட்டுத்திடல் அண்ணாநகரைச் சோ்ந்த மாசானம் மகன் சுடலைமணி (22), கிருஷ்ணன் கோயில் தெருவைச் சோ்ந்த மகாராஜன் மகன் அருணாசலசெந்தில்குமாா் என்ற அருண் (19). இவா்கள் இருவரும் கடந்த ஏப். 7ஆம் தேதி தாழையூத்து அருகே வழிப்பறியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனா். மேலும், இவா்கள் கொள்ளை வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததாக புகாா் வந்ததை அடுத்து, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணண், இருவா் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். அதன்பேரில் மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு உத்தரவின்படி, சுடலைமணி, அருண் ஆகிய இருவரையும் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.