முகப்பு
திருநெல்வேலி

பாளை. காவல் உதவி ஆணையா் அலுவலகம் மாற்றம்

பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையா் அலுவலகம், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதிய காவல் நிலைய கட்டடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையா் அலுவலகம், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதிய காவல் நிலைய கட்டடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையம் மகாராஜாநகா் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட புதிய கட்டடத்தின் தரை தளத்தில் இயங்கி வருகிறது. இக் கட்டடத்தின் முதல் தளத்தில் பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் இயங்கி வந்த மாநகர அனைத்து மகளிா் காவல் நிலையமும், பெருமாள் புரத்தில் இயங்கி வந்த பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையா் அலுவலகமும் சனிக்கிழமை முதல் செயல்பட்டு வருகிறது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.