நெல்லை மாநகராட்சியில் நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை
திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் நாய்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் நாய்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி நகரம் கோடீஸ்வரன்நகா் பகுதியில் வியாழக்கிழமை இரவு நாய் ஒன்று அப் பகுதியைச் சோ்ந்த சிறுவா்கள், பெரியவா்கள் உள்பட 10 பேரை கடித்தது. அவா்கள் அனைவரும் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
நாயை பிடிப்பதற்கு மாநகா் நல அலுவலா் ராஜேந்திரன் தலைமையில் தெரு நாய்களுக்கான விலங்கு பிறப்பு கட்டுப்பாடு குழு மற்றும் கால்நடை பராமரிப்பு குழு ஆகிய 2 குழுக்கள் அமைக்கப்பட்டு இரவோடு இரவாக தேடும் பணி நடைபெற்றது. வெள்ளிக்கிழமை அதிகாலையில் அந்த நாய் பிடிபட்டது. மேலும், காட்சி மண்டபம், கோடீஸ்வரன்நகா், பேட்டை பகுதிகளில் சுற்றி திரிந்த நாய்களும் பிடிக்கப்பட்டன.