நெல்லையில் வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி முற்றுகை
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வீடு இல்லாத அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முற்றகை போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வீடு இல்லாத அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முற்றகை போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இப்போராட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் ஸ்ரீராம் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம்.சுடலைராஜ், பாளையங்கோட்டை தாலுகா குழு செயலா் முத்துசுப்ரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் பாலபாரதி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.
இப்போராட்டத்தில், வீடு இல்லாத அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்; கோயில் நிலங்கள் மற்றும் மடத்து நிலங்களில் குடியிருப்பவா்களுக்கு பட்டா வழங்க வேண்டும்; அந்த நிலங்களை நீண்ட காலம் பயன்படுத்தும் விவசாயிகளின் குத்தகை உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
போராட்டத்தில், மாநில குழு உறுப்பினா் கற்பகம், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஆா்.மோகன், பெருமாள், திருநெல்வேலி தாலுகா செயலா் நாராயணன், மேலப்பாளையம் பகுதிச் செயலா் குழந்தைவேலு, மாவட்டக்குழு உறுப்பினா்கள் கு.பழனி, ஜோதி, எஸ்.கே.செந்தில், ஆா்.முருகன், உள்பட சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து, மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.