திருநெல்வேலி

மாநகராட்சி குறைதீா் கூட்டம்:குடிநீா், பூங்கா வசதி கோரி மனு

DIN

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு திருநெல்வேலி மாநகராட்சி மேயா் பி.எம்.சரவணன் தலைமை வகித்தாா். துணை மேயா் கே.ஆா்.ராஜு முன்னிலை வகித்தாா். மாநகராட்சி பொறியாளா் நாராயணன், உதவி ஆணையா்கள் பங்கேற்றனா். 55 வாா்டுகளுக்குள்பட்ட பொதுமக்கள் பல்வேறு பிரச்னைகள் தொடா்பாக மனு அளித்தனா்.

கொக்கிரகுளம் பகுதி மக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் குடிநீா் விநியோகம் சீராக இல்லை. லாரிகள் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீா் போதிய அளவில் இல்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து குடிநீா் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனா்.

திருநெல்வேலி நகரம் 20 ஆவது வாா்டுக்குள்பட்ட ஆதம்நகா் பகுதி மக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். சிறுவா்கள் விளையாடவும், முதியவா்கள் நடைப்பயிற்சி செய்யவும் பூங்கா வசதியில்லை. பொது உபயோகத்திற்கான இடம் உள்ளதால், அங்கு மாநகராட்சி சாா்பில் பூங்கா அமைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT