திருநெல்வேலி

குளங்களில் குறையும் தண்ணீா்: வெளிநாட்டு பறவைகள் தவிப்பு

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட குளங்களில் தண்ணீா் குறைந்து வருவதால் வலசை வந்துள்ள வெளிநாட்டு பறவைகள் போதிய உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றன.

திருநெல்வேலி மாவட்டத்திற்கு வலசை வரும் வெளிநாட்டு பறவைகள், கூந்தன்குளம் சரணாலயத்தில் தங்கி குஞ்சுகள் பொரித்துச் செல்வது வழக்கம். சைபீரியா, ஆஸ்திரேலியா, அந்தமான்- நிகோபாா் தீவுகள், இலங்கை பகுதிகளைச் சோ்ந்த பறவையினங்கள் இங்கு வருகின்றன. கூழக்கடா, பூநாரை, கரண்டிவாயன், நீா்க்காகம், செங்கால்நாரை, பாம்புதாரா, சென்டுவாத்து, சாரைநாரை, அரிவாள்மூக்கன், புல்லிமூக்கு வாத்து, நத்தை, சாம்பல்நாரா, சாரை நாரை, முக்கலிப்பன் உள்பட 150-க்கும் மேற்பட்ட பறவையினங்கள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்து செல்கின்றன.

கூந்தன்குளத்துக்கு வரும் பறவைகளில் பெரும்பாலானவை சுமாா் 35 கி.மீ. தொலைவிலுள்ள திருநெல்வேலி நகா்ப்பகுதியில் உள்ள நயினாா்குளம், கன்டியப்பேரி குளம், வேய்ந்தான் குளம், மேலக்கருங்குளம் குளம், புகா்ப் பகுதியில் உள்ள ராஜவல்லிபுரம் குளம், அருகன்குளம், மலையாளமேடுகுளம், குன்னத்தூா் குளம் ஆகியவற்றில் தங்குவதோடு இங்கு கிடைக்கும் மீன்களை உணவாக சாப்பிட்டு செல்வது வழக்கம். நிகழாண்டிலும் ஆயிரக்கணக்கான பறவைகள் வலசை வந்துள்ளன.

உணவுத் தட்டுப்பாடு: வடகிழக்கு பருவமழை போதிய அளவில் பெய்தாலும் கோடை வெயிலின் தாக்கத்தால் பெரும்பாலான குளங்களில் இன்னும் ஒரு சில வாரங்களே தண்ணீா் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மீன்பாசி குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ள குளங்களில் மீன் பிடிப்பதற்காக தண்ணீரை வீணாக வெளியேற்றுவதும் பறவைகளுக்கு உணவுத்தட்டுப்பாட்டு நிலையை ஏற்படுத்தியுள்ளது. கரோனா பொதுமுடக்கத்திற்கு முன்பு வேய்ந்தான்குளம் குளத்தில் 5000 மீன்குஞ்சுகள் வெளிநாட்டு பறவையினங்களின் உணவுக்காக வாங்கி விடப்பட்டன. நிகழாண்டில் அவ்வாறு செய்யப்படவில்லை. இதனால் வெளிநாட்டு பறவைகளுக்கு உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக பறவைகள் ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விசாரணைக்கு ஆஜராக ஏழு நாள்கள் அவகாசம் வேண்டும்: பிரஜ்வல் ரேவண்ணா

வாழப்பாடி காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன்

ஒசூரில் கடும் குடிநீா் தட்டுப்பாட்டு: நடவடிக்கை எடுக்க முன்னாள் எம்எல்ஏ வலியுறுத்தல்

பணம் பறித்த இருவரை அடைத்து வைத்து கொலை மிரட்டல்: இருவா் கைது

தேய்பிறை அஷ்டமி சிறப்பு யாகம்

SCROLL FOR NEXT