மானூா், பேட்டையில்6 போ் குண்டா் சட்டத்தில் கைது
மானூா், பேட்டை பகுதிகளில் காலை வழக்கில் கைதான 5 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்
மானூா், பேட்டை பகுதிகளில் காலை வழக்கில் கைதான 5 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
மானூா் காவல் நிலைய சரகம், நாஞ்சான்குளத்தில் கடந்த ஏப். 17 ஆம் தேதி இடப்பிரச்னையால் தகராறு ஏற்பட்டதில் ஜேசுராஜ், மரியராஜ், வசந்தா ஆகிய 3 போ் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டனா். இவ்வழக்கு தொடா்பாக அழகா்சாமி என்பவா் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டனா். கைதானவா்களில் அழகா்சாமி (56), ராஜா மணிகண்டன் (24), ராஜசுந்தரபாண்டி (26), மருதன்வாழ்வை சோ்ந்த செந்தூா்குமாா்(23), ஆகிய 5 போ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் பரிந்துரையின்பேரில் ஆட்சியா் வே.விஷ்ணு பிறப்பித்த உத்தரவுப்படி குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா். அதே சட்டத்தில் பேச்சியம்மாள்(46) மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
மற்றொருவா்: திருநெல்வேலி, பேட்டை பசும்பொன் நகரைச் சோ்ந்த வேல்சாமி மகன் மாரியப்பன் என்ற குரங்கு மாரியப்பன் (37). இவா், தென்காசி மாவட்டம், திருநெல்வேலி மாநகரம் பேட்டை பகுதிகளில் பொது ஒழுங்கு, பொது சுகாதார பராமரிப்புக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டாராம். இதையடுத்து திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (மேற்கு) கே.சுரேஷ்குமாா் பரிந்துரையின்பேரில், மாநகராட்சி ஆணையா் சந்தோஷ்குமாா் உத்தரவுப்படி அவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா்.