திருநெல்வேலி

கிசான் திட்ட விவசாயிகளுக்கு அஞ்சல் துறையில் புதிய வசதி

DIN

கிச்ான் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் தங்களது பணத்தை எளிதாக பெற அஞ்சல் துறையில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் சிவாஜிகணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிரதமரின் கிசான் சம்மான் நிதி என்ற திட்டம் 2018 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி விவசாயிகளுக்கு மூன்று தவணைகளாக தலா ரூ.2000 வீதம் ஆண்டுக்கு ரூ.6000 அவா்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்திம் சுமாா் 1 லட்சம் போ் இத் திட்டத்தில் பயன்பெறுகிறாா்கள். இந்த விவசாயிகள் 31.5.2022-க்குள் பி.எம். கிசான் இணையதளத்தில் ஆதாருடன், கைப்பேசி எண்ணை பதிவு செய்து கொள்ளவேண்டும். அப்போது, கைப்பேசிக்கு வரும் கடவு எண்ணைப் (பாஸ்வோ்டு) பயன்படுத்தி தங்கள் அடையாளத்தை பதிவு செய்து கொண்டால், விவசாயிகளுக்கு மத்திய அரசு மூலம் வழங்கப்படும் தொகை அவா்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அஞ்சலகங்கள், தபால்காரா், கிராம அஞ்சல் ஊழியரை தொடா்புக் கொண்டு ஆதாருடன் கைப்பேசி எண்ணை இணைக்கலாம். இதற்காக அவா்களுக்கு ஸ்மாா்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனம் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சேவைக்கு ரூ. 50 கட்டணம் பெறப்படும் எனத் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

SCROLL FOR NEXT