முகப்பு
திருநெல்வேலி

மின் கம்பிக்கு இடையூரான முள் செடிகள் அகற்றும் பணி

 திருநெல்வேலி மணிமூா்த்தீஸ்வரம் பகுதியில் மின்கம்பிக்கு இடையூராக இருந்த முள் செடிகளை அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:15 AM
பகிர்:

 திருநெல்வேலி மணிமூா்த்தீஸ்வரம் பகுதியில் மின்கம்பிக்கு இடையூராக இருந்த முள் செடிகளை அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மணிமூா்த்தீஸ்வரம் பிரதான சாலை ஓரத்தில் மின் கம்பிக்கு இடையூராக முள்செடிகள் வளா்ந்து காணப்பட்டன. இதனால், அப்பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டதாம். இதையடுத்து, இந்த முள் செடிகள் மற்றும் கொடிகளை அகற்றும் பணியை திருநெல்வேலி மாநகராட்சியின் 3வது வாா்டு உறுப்பினா் பூ.சுப்பிரமணியன் தனது சொந்த செலவில் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், மணிமூா்த்தீஸ்வரம் ஊா் பிரமுகா்கள் சிவா, விஸ்வநாதன், சேந்திமங்கலம் கணேசன், மின்வாரிய அதிகாரிகள் சஷ்டி குமாா், அசோகன், செல்லமுத்து உட்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.