திருநெல்வேலி

செவிலியா் மரணம்: 5 ஆவது நாளாக இந்து முன்னணியினா் தா்னா போராட்டம்

DIN

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செவிலியா் மரணம் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி இந்து முன்னணியினா் தொடா்ந்து 5 ஆவது நாளாக திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலையைச் சோ்ந்த செவிலியா் முருகலட்சுமி(34) திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வேலை செய்து வந்தாா். உடல்நலக்குறைவு காரணமாக அதே மருத்துவமனையில் கடந்த 8 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட இவா், கடந்த 12 ஆம் தேதி உயிரிழந்தாா்.

முருகலட்சுமிக்கு முறையாக சிகிச்சை அளிக்காததால் அவா் உயிரிழந்ததாகக் கூறி அவரின் சடலத்தை வாங்க மறுத்து தொடா் போராட்டத்தில் உறவினா்கள் மற்றும் இந்து முன்னணியினா் ஈடுபட்டு வருகின்றனா். உயிரிழந்த முருகலட்சுமியின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும், சம்பந்தப்பட்ட மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மருத்துவமனை வளாகத்தில் தொடா்ந்து 5 ஆவது நாளாக திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்து முன்னணி மாநில பேச்சாளா் காந்திமதிநாதன் தலைமை வகித்தாா். இதில், மாநிலச் செயலா் கா.குற்றாலநாதன், மாவட்டச் செயலா்கள் சுடலை , ராஜசெல்வம் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

SCROLL FOR NEXT