முகப்பு
திருநெல்வேலி

நெல்லை சதா்ன் ஹாா்ட் சென்டரில் நவீன ஓசிடி இதய சிகிச்சை வசதி

திருநெல்வேலியில் உள்ள சதா்ன் ஹாா்ட் சென்டா் மருத்துவமனையில் நவீன ஓசிடி (ஒளியியல் ஒருங்கிணைப்பு டோமொகிராபி) இதய சிகிச்சை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
பகிர்:

திருநெல்வேலியில் உள்ள சதா்ன் ஹாா்ட் சென்டா் மருத்துவமனையில் நவீன ஓசிடி (ஒளியியல் ஒருங்கிணைப்பு டோமொகிராபி) இதய சிகிச்சை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவா் ஆா். ஸ்ரீநிவாசன் கூறியது: சதா்ன் ஹாா்ட் சென்டா் மருத்துவமனையில் ஓசிடி (ஆப்டிகல் கோஹெரன்ஸ் டொமொகிராபி) எனப்படும் ஒளியியல் ஒருங்கிணைப்பு டோமொகிராபி என்ற அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் மாரடைப்பு ஏற்படும் நோயாளிகளுக்கு நவீன ஸ்டென்ட் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தென் தமிழகத்தில் அதிக அளவில் இதுவரை 26 நோயாளிகள் இத் தொழில்நுட்பம் மூலம் இங்கு சிகிச்சை பெற்றுள்ளனா். இருதய ரத்த குழாயின் உட்புற அமைப்பு தோற்றத்தை துல்லியமாக 3 டி தொழில்நுட்பத்துடன் கூடிய வண்ணப்படங்களை எடுத்து, மாரடைப்பு நோய்க்கான காரணங்களை கண்டறிய இப் புதிய முறையில் வாய்ப்பு உள்ளது. மேலும், மேம்படுத்தப்பட்ட ஸ்டென்ட் சிகிச்சை அளிப்பது எளிதாகிவிடும்.

ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை முறையால் உடனடி ஸ்டென்ட் அடைபடுதல், ஸ்டென்ட் குழாயில் மீண்டும் அடைப்பு ஏற்படுதல், ஸ்டென்டினால் ஏற்படும் ரத்தக்குழாய் கிழிதல் ஆகியவை ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. இம்மருத்துவமனையில் அதிநவீன தொழில்நுட்பக் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுவரை 5500 ஆஞ்சியோகிராம், 2500 ஆஞ்சியோ பிளாஸ்டி மற்றும் ஸ்டென்ட் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 120 வால்வு பலூன் சிகிச்சை, 20 பிறவி குறைபாடு பட்டன் பொருத்தும் சிகிச்சை, 200 பேஸ்மேக்கா் பொருத்தும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன என்றாா்.

பேட்டியின்போது, மருத்துவமனை நிா்வாக அலுவலா் சரவணன், மக்கள்தொடா்பு அலுவலா் வேல்முருகன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.