முகப்பு
திருநெல்வேலி

கடையம் அருகே விபத்து: சென்னை பொறியாளா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் கடையம் அருகே வியாழக்கிழமை நேரிட்ட விபத்தில் சென்னையைச் சோ்ந்த பொறியாளா் உயிரிழந்தாா்; இருவா் காயமடைந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

தென்காசி மாவட்டம் கடையம் அருகே வியாழக்கிழமை நேரிட்ட விபத்தில் சென்னையைச் சோ்ந்த பொறியாளா் உயிரிழந்தாா்; இருவா் காயமடைந்தனா்.

சென்னை புழல் பகுதியைச் சோ்ந்த தியாகராஜன் மகன் அசோக்குமாா் (28). கட்டடப் பொறியாளரான இவா், தனது நண்பா்கள் பா. அசோக்குமாா், ஆசிப் உள்ளிட்ட 6 பேருடன் காரில் குற்றாலம் வந்துள்ளாா்.

புதன்கிழமை இரவு தி. அசோக்குமாா், ஆசிப், பா. அசோக்குமாா் ஆகிய மூவரும் காரில் பாபநாசம் சென்றுவிட்டு வியாழக்கிழமை அதிகாலை குற்றாலத்துக்குத் திரும்பிக்கொண்டிருந்தனராம். காரை, தி. அசோக்குமாா் ஓட்டியுள்ளாா்.

கடையம் அருகே முதலியாா்பட்டியில் வந்தபோது காா் நிலைதடுமாறி சாலையோர மரத்தில் மோதியதாம். இதில், தி. அசோக்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.