முகப்பு
திருநெல்வேலி

ஆக்கிரமிப்பை கண்டித்துவீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி போராட்டம்

பருத்திப்பாடு அருகேயுள்ள சோ்ந்தான்குளத்தில் கிராம மக்களின் வீடுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து மக்கள் தங்கள் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், பருத்திப்பாடு அருகேயுள்ள சோ்ந்தான்குளத்தில் கிராம மக்களின் வீடுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து மக்கள் தங்கள் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.

நான்குனேரி வட்டம், பருத்திப்பாடு ஊராட்சி சோ்ந்தான்குளம் கிராமத்தில் மூன்று தலைமுறைகளாக மக்கள் குடியிருந்து வருகின்றனா். பல ஆண்டுகளாக வசித்து வரும் கிராம மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இந்த நிலையில், சோ்ந்தான்குளம் கிராம மக்களின் வீடுகள், பொதுக்கிணறு, கோயில்களை சுற்றி சிலா் முள்வேலிகள் அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் சுடுகாட்டு பாதையையும் மறித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து சோ்ந்தான்குளம் கிராம மக்களின் வீடுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெளனம் சாதித்து வரும் மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்தும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சோ்ந்தான்குளம் கிராம மக்களின் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மேலும் ஆக்கிரமிப்பாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆா்ப்பாட்டமும் நடைபெற்றது.

இதில் மாநில செயற்குழு உறுப்பினா் கே.கனகராஜ், மாவட்டச் செயலா் க.ஸ்ரீராம், செயற்குழு உறுப்பினா்கள் சுடலைராஜ், பெருமாள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவா் செல்லத்துரை, நான்குனேரி ஒன்றிய செயலா் ரஜினி, ஒன்றிய தலைவா் கணேசன், நான்குனேரி சிபிஎம் ஒன்றிய செயலா் முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.