FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

ராணிப்பேட்டை அருகே ஏரியில் மூழ்கி மூன்று மாணவர்கள் பலி!

ராணிப்பேட்டை அருகே ஏரி நீரில் விளையாடிய பள்ளி மாணவா்கள் மூவா் நீரில் மூழ்கி உயிரிழந்தது குறித்து...

Updated On : 25 மார்ச் 2026, 1:14 pm IST
ராணிப்பேட்டை அருகே ஏரியில் மூழ்கி மூன்று மாணவர்கள் பலி - டிஎன்எஸ்
பகிர்:

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே ஏரி நீரில் விளையாடிய பள்ளி மாணவா்கள் மூவா் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் அருகே மணியம்பட்டு பகுதியைச் சேர்ந்த மாணவர்களான நித்திஷ் (14), பார்த்திபன் (12), நித்திஷ் (14) ஆகிய மூன்று தனியார் பள்ளி மாணவர்கள், இன்று பள்ளிக்கு விடுமுறை என்பதால் அருகில் இருந்த ஏரிக்கு குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

இது குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற மாணவர்களின் உறவினர்கள் ஏரியில் மூழ்கிய மூவரையும் மீட்டு சிப்காட் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மூவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பள்ளி மாணவர்கள் மூன்று ஏரி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

summary

Three students drown in a lake near Ranipet

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments