கல்லிடைக்குறிச்சி அந்தோனியாா் திருத்தல திருவிழா கொடியேற்றம்
கல்லிடைக்குறிச்சி புனித அந்தோனியாா் திருத்தல திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கல்லிடைக்குறிச்சி புனித அந்தோனியாா் திருத்தல திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இருதயகுளம் பங்குத் தந்தை பாக்கிய செல்வன் அடிகளாா் கொடியேற்றினாா். திருத்தல அதிபா் அருள் தந்தை அருள் அந்தோணி, அருள்தந்தை ஆரோக்கியராஜ் ராபின் ஆகியோா் திருப்பலி நிறைவேற்றினா்.
செப். 13 ஆம் தேதி திருவிழா திருப்பலி மற்றும் சப்பர பவனி நடைபெறுகிறது. திருவிழா நாள்களில் தினமும் மாலையில் திருப்பலி மற்றும் நற்கருணை ஆராதனை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பங்குப் பேரவை மற்றும் கத்தோலிக்க சேவா சங்கத்தினா் செய்து வருகின்றனா்.