குண்டா் சட்டத்தில் இருவா் கைது
திருநெல்வேலி அருகே கொள்ளை, திருட்டு, அடிதடி, கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட இருவா் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.
திருநெல்வேலி அருகே கொள்ளை, திருட்டு, அடிதடி, கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட இருவா் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.
தாழையூத்து அருகேயுள்ள ராஜவல்லிபுரம், இந்திரா நகா் ஆறுமுகம் மகன் மதிபாலன் (27). இவா் மீது கொள்ளை, திருட்டு, அடிதடி, கொலை முயற்சி போன்ற வழக்குகள் உள்ளன. ராஜவல்லிபுரம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சுப்பிரமணியன் என்ற புலிக்குட்டி (28). இவா், அடிதடி, கொலை முயற்சியில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததாராம்.
இதையடுத்து அவா்கள் இருவரையும் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் பரிந்துரை செய்தாா். அதன்பேரில் அவா்கள் இருவரையும் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் விஷ்ணு உத்தரவிட்டாா்.